Thursday, June 16, 2022

ஹஜ் பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான ஹஜ் விளக்க விழா அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )… நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின்

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

ஹஜ் பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான
ஹஜ் விளக்க விழா
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )…
நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின்
( 23/06/2022)அன்று புனிதஹஜ் பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *ஹஜ் விளக்க விழா
(14/06/2022 செவ்வாய்கிழமை ) அன்று லால்பேட்டை , J .M .A மஹாலில் மிக சிறப்பாக நடைப்பெற்றது *
அல்ஹம்து லில்லாஹ் …..
துவக்கமாக மவ்லானா மவ்லவி,ஹாபிழ்
A.அப்துல் கையும் ஹஜ்ரத் அவர்கள் மறை வசனங்களை ஓத,
ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர்
மவ்லானா மவ்லவி,ஹாபிழ் A .மாஸுமுல்லாஹ் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் வரவேற்று துவக்க உரை நிகழ்த்தினார்கள்.
மேலும் இவ்விழாவில்
இளையான்குடி புதூர் தைக்கா ஜும்ஆ பள்ளி தலைமை இமாம்
மவ்லானா மவ்லவி M .முஹம்மது இப்ராஹீம் பைஜி ஹஜ்ரத் அவர்களும் ,
ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர்,
மவ்லானா மவ்லவி அல் ஹாஜ் V R அப்துல் சமது மன்பஈ ஹஜ்ரத் அவர்களும் ,
ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர்,
மவ்லானா மவ்லவி S, முஹம்மது அலி மன்பஈ ஹஜ்ரத் அவர்களும் ,
ஹஜ் கடமையை நிறைவேற்றும் முறை மற்றும் அதன் சட்டங்கள் அனைத்தயும் தெளிவாக மிக சிறப்பாக உரையாற்றினார்கள் .
மேலும் அல் பஷாரத் உரிமையாளார்
O M முஹம்மது சுஹைபு அவர்க ஹஜ் பயணம் பற்றிய விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.
இறுதியாக ஜாமியா மன்பவுல் அன்வாரின் முதல்வர் ,முஃப்தி
மவ்லானா மவ்லவி,ஹாபிழ் A .நூருல் அமீன் மன்பஈ ஹஜ்ரத்,கடலூர் மாவட்ட அரசு காஜி அவர்கள் துஆவுடன் இனிதே நிறைவுற்றது.
இவ்விழாவில் ஹாஜிகள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இறுதியாக
விருந்து உபசரிப்புடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது….அல்ஹம்துலில்லாஹ்…..
ஆகஸ்ட் 2022 முதல் உம்ராஹ் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .9566992919. 04144-268114….
live vedio link…

No comments:

Post a Comment